என் மலர்
செய்திகள்

தற்கொலை
சிவகாசி அருகே லாரி டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
சிவகாசி அருகே மின் கம்பத்தில் தூக்குப்போட்டு லாரி டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரன். லாரி டிரைவர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லாரியில் இருந்து குதித்தபோது கால் முறிவு ஏற்பட்டு வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தார். அவரை குடும்பத்தினர் சமாதானம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர் அங்குள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள மின் கம்பத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story