என் மலர்
செய்திகள்

கலெக்டர் அருண்
10ம் வகுப்பு மாணவர்களுக்கு காணொலி காட்சி மூலம் பாடம்- கலெக்டர் அருண் தகவல்
ஊரடங்கு அமலில் உள்ளதால் புதுவையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் காணொலி காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படுவதாக கலெக்டர் அருண் கூறி உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ளதால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் காணொலி காட்சி வழியாக பாடங்கள் நடத்தப்படுகிறது. மாணவ-மாணவிகளுக்கு நிபுணத்துவம் வாய்ந்த ஆசிரியர்கள் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் கல்வித்துறையின் யூடியூப் இணையதளத்தில் வெற்றி நிச்சயம் எனும் நிகழ்ச்சியாக பாடங்களை நடத்தி வருகின்றனர்.

ஒளிபரப்பு செய்யப்பட்ட பாடங்கள், நேரடி கேள்வி பதில்கள் யூடியூப்பில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை பார்ப்பவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை கடந்துள்ளது. ஒரு லட்சத்து 27 ஆயிரம் பேர் சந்தாதாரர்களாக உள்ளனர். கல்வித்துறை அலுவலகத்தில் உள்ள மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூகவியல் பாடங்களில் கேட்கப்பட்ட 70 கேள்விகளுக்கு ஆசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story