என் மலர்
நீங்கள் தேடியது "10th student"
தேர்வு சரியாக எழுதவில்லை என 10-ம் வகுப்பு மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை நாடியம்மன் கோவில் செல்லும் வழியில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சூரிய பாண்டி மகள் யோகேஸ்வரி (வயது 15). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தவர்.
தேர்வு எழுதிய மாணவி மாலை வீட்டிற்கு வந்து தேர்வு சரியாக எழுதவில்லை என பேசிக்கொண்டிருந்தார். மனஉளைச்சலில் இருந்த மாணவி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதைக்கண்ட தாயார் செல்லம்மாள் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் சீனிவாசன் மனைவி சித்ரா (51) ஆகியோர் சேர்ந்து கதவை உடைத்து மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






