என் மலர்
செய்திகள்

சுற்றுலா பயணிகள்
கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி- புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் ஓட்டல்களில் அறைகள் பல காலியாக உள்ளன.
புதுச்சேரி:
சீனாவில் பலரது உயிரை பறித்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவிலும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர்.
குறிப்பிட்ட சில நாடுகளை சேர்ந்தவர்கள் இந்தியாவிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோரும் விமான நிலையத்தில் பலத்த சோதனைக்கு பின்னரே வெளியேற அனுமதிக்கப்படுகின்றனர்.
புதுவையை பொறுத்தவரை சுற்றுலா பயணிகள் வருகைதான் நகரத்தை சிறப்பாக வைத்திருக்கும். தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதால் வெளிமாநில சுற்றுலா பயணிகள் புதுவைக்கு சுற்றுலா வருவதை தவிர்த்துள்ளனர்.
இதேபோல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் ஓட்டல்களில் அறைகள் பல காலியாக உள்ளன. கடற்கரை, தாவரவியல் பூங்கா, சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளிட்ட இடங்களிலும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. வெளிமாநிலங்களிலிருந்து வந்த சுற்றுலா பயணிகள் முகக்கவசம் அணிந்தே புதுவையை சுற்றிப்பார்த்தனர்.

Next Story