என் மலர்
செய்திகள்

தற்கொலை
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் உறவினர் தற்கொலை
கோவையில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் உறவினர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கவுண்டம்பாளையம்:
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜனின் மகன் முகுந்தன். இவர் கோவை கவுண்டம்பாளையம், கவுண்டர் மில்ஸ் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகள் திவ்யாவை திருமணம் செய்தார்.
திவ்யாவின் தம்பி சண்முகநாதன் (வயது 25). இவர் கோவை காந்திபுரத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சண்முகநாதன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வெளியே சென்ற குடும்பத்தார் வீட்டிற்கு வந்து பார்த்தபோது சண்முகநாதன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து துடியலூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சண்முகநாதனின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தற்கொலை செய்துகொண்ட சண்முகநாதன் உடலுக்கு அஞ்சலி செலுத்த தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் இன்று மாலை கோவைக்கு வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story