search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்து வீசப்பட்ட சரண்யாவின் உடல் தோண்டி எடுக்கப்படும் காட்சி. (உள்படம்: சரண்யா)
    X
    கொலை செய்து வீசப்பட்ட சரண்யாவின் உடல் தோண்டி எடுக்கப்படும் காட்சி. (உள்படம்: சரண்யா)

    நடத்தை சந்தேகம்- நண்பர்கள் உதவியுடன் மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவன்

    ஆலங்குடி அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கொன்று கிணற்றில் வீசிய கணவன் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரை கைது செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை  மாவட்டம்  ஆலங்குடி அருகே உள்ள பள்ளத்திவிடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா என்ற ரமேஷ். இவருக்கும் ஆலங்குடி அண்ணாநகரை சேர்ந்த சரண்யா என்பவருக்கும் கடந்த 2005-ம் ஆண்டு திருமணமாகியது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கடந்த 2017 ஆம் ஆண்டு சரண்யா திடீரென மாயமானார்.

    இதுகுறித்து சரண்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாததால் சரண்யாவின் பெற்றோர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

    இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதனையடுத்து சரண்யா காணாமல் போன வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வந்தனர். இதற்கிடையே மாயமான சரண்யா மற்றும் அவரது கணவர் ராஜாவின் செல்போன் விபரங்களை சேகரித்தனர். அப்போது சரண்யாவுடன் தொடர்பில் இருந்த வெளிநாட்டு எண்ணை ஆய்வு செய்தனர். அது ரகு என்ற ரகுவரன் என்பவரது எண் என்பது தெரிந்தது.

    அவரை திருச்சி வரவழைத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் விமான நிலையத்தில் இருந்து அழைத்து சென்று விசாரித்ததில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மேலும் சரண்யாவின் கணவர் ராஜாவையும் போலீசார் அழைத்து விசாரித்தனர். இதில் மனைவி சரண்யாவின்  நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவரே திட்டம் போட்டு கொலை செய்தது அம்பலமானது. இதற்காக ராஜா தனது நண்பர்கள் ரகு, பாட்ஷா, சிவப்பிரகாசம் ஆகிய 3 பேரிடம் தலா ரூ.1 லட்சம் கொடுத்து தனது மனைவியை கொலை செய்யுமாறு கூறியதாகவும், அவர்கள் ஒன்று சேர்ந்து சரண்யாவை கொலை செய்து சம்ராயன்பட்டி கிராமத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் வீசி விட்டதாகவும் அவரது கணவர் ராஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.

    இதனையடுத்து ராஜாவை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் சரண்யாவை வீசி சென்ற கிணற்றை அடையாளம் காட்டினார். ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் சரண்யாவின் உடல் எலும்புக்கூடாக மீட்கப்பட்டது.

    அதனை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய கணவர் ராஜா மற்றும் பாட்ஷா ரகு உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தலைமறைவான சிவப்பிரகாசத்தை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×