search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருத்தாசலம் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்லதுரை
    X
    விருத்தாசலம் ஒன்றிய குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட செல்லதுரை

    விருத்தாசலம் ஒன்றிய குழு தலைவராக அதிமுக கவுன்சிலர் போட்டியின்றி தேர்வு

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த செல்லதுரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 19 வார்டுகள் உள்ளன.

    இதில் அ.தி.மு.க. 5 வார்டுகளையும் தி.மு.க. 4 வார்டுகளையும் பா.ம.க. 4 வார்டுகளையும் தே.மு.தி.க. 1 வார்டையும் பா.ஜ.க 1 வார்டையும் சுயேட்சை 4 வார்டுகளையும் கைப்பற்றியது.

    இன்று ஊராட்சி ஒன்றிய குழுதலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தல் விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் 18-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் செல்லத்துரை ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டார்.

    அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் ஒன்றிய குழு தலைவராக அ.தி.மு.கவை சேர்ந்த செல்லதுரை போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    அவருக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஒன்றிய கவுன்சிலர்கள் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்து கூறினர்.
    Next Story
    ×