search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓஎன்ஜிசி அதிகாரியை மணிகண்டன் தாக்குவதை படத்தில் காணலாம்.
    X
    ஓஎன்ஜிசி அதிகாரியை மணிகண்டன் தாக்குவதை படத்தில் காணலாம்.

    சீர்காழி அருகே ஓஎன்ஜிசி அதிகாரியை தாக்கிய விவசாயி கைது

    சீர்காழி அருகே குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஓஎன்ஜிசி அதிகாரியை தாக்கிய விவசாயி கைது செய்யப்பட்டார்.
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக எண்ணை எடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம் பழைய பாளையத்தில் இருந்து மாதானம், எடமணல், திருநகரி, நாங்கூர், மேமாத்தூர் வழியாக நரிமணம் வரை சுமார் 60 கி.மீ. தூரத்துக்கு எரிவாயு எடுத்து செல்ல குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    இந்த பணி கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த குழாய் பதிக்கும் பணிக்கு பல்வேறு இடங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது நடவு செய்திருந்த பயிர்கள் அனைத்தும் சேதமடைந்ததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் சீர்காழி அருகே திருநகரியில் நேற்று ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் குழாய் பதிக்கும் பணி நடந்தது. அப்போது அங்கு விவசாயிகளுடன் மங்கைமடத்தை சேர்ந்த விவசாயி மணிகண்டன் (வயது 31) என்பவர் வந்தார். அந்த சமயத்தில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஒப்பந்த தொழிலாளர்களுடன் மணிகண்டன் வாக்குவாதம்  செய்தார். அப்போது அங்கு வந்த ஒரிசா மாநிலத்தை சேர்ந்த சூப்பர்வைசர் அமிரின் பர்தாசிடம் விவசாய நிலத்தில் குழாய்கள் பதிப்பதால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டு வருவதாக மணிகண்டன் கூறினார். அப்போது அமிரின் பர்தாஸ், மணிகண்டனை தரக்குறைவார பேசினார். இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், அமிரின் பர்தாசை திடீரென அடித்து உதைத்தார். மேலும்  அவரை விரட்டி விரட்டி தாக்கியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து அதிகாரி அமிரின் பர்தாஸ், இந்த சம்பவம் குறித்து திருவெண்காடு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விவசாயி மணிகண்டனை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×