search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் செங்கோட்டையன்
    X
    அமைச்சர் செங்கோட்டையன்

    ஆங்கிலம் சரளமாக பேச விரைவில் மாணவர்களுக்கு சி.டி. வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சிடி விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    கோபி:

    கோபியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    இந்த அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. 15 லட்சத்து 75 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஷூ வழங்கப்படும்.

    க்யூ.ஆர். கோடு மூலமாக பாடங்களை மாணவ, மாணவிகள் படிக்கும் திட்டம் இந்தியாவிலேயே முதன் முதலாக துவங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு பாடங்களை கற்றுத் தருவதற்காக ஆசிரியர்களுக்கு மடிக்கணினி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேச 2 ஆயிரம் வார்த்தைகள் கொண்ட சிடி தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் வழங்கப்படும். தற்காலிக ஆசிரியர்களை நியமனத்தில் குளறுபடி இருக்குமானால் புகார் கொடுத்தால் அதன் பேரில், நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிடி

    100 அரசு பள்ளிக் கூடங்களில் தலா ரூ.2.50 கோடி செலவில் அவுட்டோர் ஸ்டேடியம் மத்திய அரசு அனுமதியுடன் அமைக்கப்படும். கோபியை தலைநகரமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க வேண்டும் என சிலர் பேசி வருகிறார்கள். நான் கோபியைச் சேர்ந்தவன். எனக்கு கோபியை தலைநகரமாகக் கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை உண்டு.

    ஆனால், அதை அமைப்பதற்கு 100 ஏக்கர் நிலம் தேவை. எல்லா மாவட்டத்தையும் பிரிப்பது தான்அரசின் நோக்கமாக உள்ளது. மாணவர்கள் 18 வயது நிரம்பினால்தான் வாகனம் ஓட்ட வேண்டும் என மோட்டார் வாகன சட்டம் உள்ளது. வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது போன்ற விதிமுறைகளும் உள்ளன. இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×