என் மலர்
செய்திகள்

அத்திவரதரை காண குவிந்த பக்தர்கள்.
காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்
காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 3 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர். நெரிசலில் சிக்கி 40 பேர் மயக்கம் அடைந்தனர்.
காஞ்சிபுரம்:
108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் கடந்த 1-ந் தேதி முதல் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். 28-வது நாளான நேற்று அத்திவரதர் முத்து கீரிடம், நீல நிற பட்டாடையில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
நேற்று பெருமாளுக்கு உகந்த ஏகாதசி ஆகும். மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் அத்திவரதரை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
வரதராஜ பெருமாள் கோவில் கிழக்கு கோபுரம் இலவச தரிசன வரிசையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நின்றனர். ஒரு பக்தர் தரிசனம் செய்ய 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
அத்திவரதரை தரிசிக்க காத்திருக்கும் பக்தர்கள் வரிசையில் சென்றாலும் அருகே செல்லும்போது அதிக அளவில் பக்தர்கள் கூடுவதால் தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அத்திவரதரின் அருகில் செல்லும்போது போலீசார் பக்தர்களை விரைவாக தள்ளிவிட்டு விடுகின்றனர்.
இதனால் அத்திவரதரை 8 மணி நேரம் காத்திருந்தும் கூட சரிவர தரிசனம் செய்ய முடியவில்லை என்று பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

நேற்று ஒரே நாளில் அத்திவரதரை 3 லட்சம் பக்தர்கள் தரிசித்தனர். நெரிசலில் சிக்கி 40 பக்தர்கள் மயக்கம் அடைந்தனர். அத்திவரதர் தரிசன விழாவில் இதுவரை 6,300 பக்தர்கள் மயக்கம் அடைந்துள்ளனர். இதுவரை 45 லட்சம் பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அத்திவரதரை தரிசிக்க நேற்று மதியம் பக்தர்கள் அதிக அளவில் காத்திருந்ததால் வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் நேற்று ஒருநாள் அத்திவரதர் தரிசனத்தை தவிர்க்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்தனர்.
அதிக அளவில் ஆட்டோ கட்டணம் வசூலிப்பதாக பக்தர்கள் குற்றம் சாட்டினர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று அத்திவரரை மத்திய சுற்றுலா மற்றும் கலாசார துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், ஆந்திர முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் ஏராளமானோர் தரிசித்தனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் 4 மாடவீதிகளிலும், லட்சக்கணக்கான கூட்டம் அலைமோதியது. கோவிலுக்கு வரவேண்டிய பக்தர்கள் 6 கி.மீட்டர் தூரம் வரை நடந்து வரவேண்டியுள்ளது.

Next Story