என் மலர்

  செய்திகள்

  கவிழ்ந்து கிடக்கும் லாரி அருகே சிக்கிய மோட்டார் சைக்கிள்.
  X
  கவிழ்ந்து கிடக்கும் லாரி அருகே சிக்கிய மோட்டார் சைக்கிள்.

  பு.புளியம்பட்டி அருகே நடு ரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து- வியாபாரி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புஞ்சை புளியம்படி அருகே இன்று காலை நடு ரோட்டில் லாரி கவிழ்ந்த விபத்தில் வியாபாரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
  பு.புளியம்பட்டி:

  திருப்பூரில் இருந்து பவானிசாகருக்கு வேஸ்ட் அட்டைகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. அந்த லாரி இன்று காலை 8.30 மணியளவில் புளியம்பட்டி அருகே வந்தது.

  அப்போது ஒரு திருப்பத்தில் திரும்பும் போது அந்த லாரி ரோட்டில் கவிழ்ந்தது. அப்போது மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வியாபாரி பழனிசாமி மோட்டார் சைக்கிளில் வந்தார்.

  அவர் மீது லாரி கவிழ்ந்ததில் வியாபாரி பழனிசாமி இடுபாடுக்குள் சிக்கி பலியானார். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

  விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை அப்பகுதி மக்கள் பிடித்து அடித்து உதைத்தனர்.

  இதில் அவர் பொதுமக்கள் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த விபத்து குறித்து புளியம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  பலியான வியாபாரி உடல் சத்தி அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.

  விபத்து நடந்த இடத்தில் இதை போல் முன்பு ஒரு லாரி ஒரு வீட்டுக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

  அந்த இடத்தில் தொடர்ந்து விபத்து நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

  Next Story
  ×