search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டிப்பட்டி அருகே கணவரை கொன்று நாடகமாடிய மனைவி 2 மாதத்திற்கு பிறகு கைது
    X

    ஆண்டிப்பட்டி அருகே கணவரை கொன்று நாடகமாடிய மனைவி 2 மாதத்திற்கு பிறகு கைது

    ஆண்டிப்பட்டி அருகே கணவரை கொன்று நாடகமாடிய மனைவியை 2 மாதத்திற்கு பின் போலீசார் கைது செய்தனர்.

    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜி.உசிலம்பட்டியை சேர்ந்தவர் அய்யனார் (வயது40). கூலித்தொழிலாளி. இவருக்கு வீரமணி (வயது36) என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர்.

    கடந்த சில வருடங்களாக ராஜதானி அருகில் உள்ள கொட்டபட்டியில் அய்யனார் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 12.3.19-ந் தேதியன்று அய்யனார் தலையில் காயங்களுடன் தோட்டத்தில் இறந்து கிடந்தார்.

    உறவினர்கள் அனைவரும் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் அய்யனார் உடலை எரிக்க முயன்றனர். இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே தடுத்து நிறுத்தினர். மேலும் அய்யனார் எவ்வாறு இறந்தார் எனவும் விசாரணை நடத்தப்பட்டது.

    தனது கணவர் சாவில் சந்தேகம் இருப்பதாக வீரமணியே போலீசில் புகார் அளித்தார். டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    பல்வேறு கோணங்களில் பலரை பிடித்து விசாரித்து வந்த நிலையில் மனைவி மீது சந்தேகம் ஏற்படவே அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தினர். இதில் தனது கணவரை கொலை செய்ததாக ஒத்துக் கொண்டார்.

    போலீசில் அவர் அளித்த வாக்குமூலத்தில் குடிபழக்கத்திற்கு அடிமையான தனது கணவர் அடிக்கடி குடித்துவிட்டு தன்னிடம் தகராறு செய்து வந்ததாகவும் சம்பவத்தன்று அதேபோல் தகராறு செய்ததால் கழுத்தை நெரித்து கொன்று விட்டு அரிவாளால் தலையில் தாக்கியதாக கூறினார். இதனையடுத்து போலீசார் வீரமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    Next Story
    ×