என் மலர்
செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் தேம்பி, தேம்பி அழுத அன்புமணி ராமதாஸ்
தர்மபுரி ஒன்றியம் கடகத்தூர் கிராமத்தில் இரவில் பிரசாரத்துக்கு சென்ற அன்புமணி ராமதாஸ், அந்த பகுதி மக்களின் வரவேற்பை கண்டு திடீரென தேம்பி, தேம்பி அழுதார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss
தர்மபுரி:
தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. வேட்பாளராக டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தர்மபுரி ஒன்றியம் கடகத்தூர் கிராமத்தில் இரவில் பிரசாரத்துக்கு சென்ற டாக்டர் அன்புமணி ராமதாசை அந்த பகுதி பொதுமக்கள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், சிறுவர்-சிறுமிகள் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், என் மீது இவ்வளவு பாசம் கொண்ட இந்த பகுதி பொதுமக்கள் வரவேற்பை கண்டு மிகவும் நெகிழ்ந்து போனேன். உங்களுக்கு அண்ணனாக, தம்பியாக, மகனாக இருந்து கடமையாற்றுவேன், என்றார். அப்போது அவர் திடீரென தேம்பி, தேம்பி அழுதார். இதைபார்த்ததும் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் அவரை அழ வேண்டாம், என்று ஆறுதல் கூறினர். தொடர்ந்து அவர் பிரசாரம் செய்தார். #LokSabhaElections2019 #AnbumaniRamadoss

Next Story