என் மலர்
செய்திகள்

சுபநிகழ்ச்சி அழைப்பிதழ் வடிவில் வைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் பேனர்.
வாக்களிக்க வலியுறுத்தி சுபநிகழ்ச்சி அழைப்பிதழ் வடிவில் டிஜிட்டல் பேனர்கள்
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சுபநிகழ்ச்சி அழைப்பிதழ் வடிவில் பேனர்களை அச்சிட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வருவாய்த்துறையினர் வைத்துள்ளனர். #LSPolls
திருச்சி:
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து சுபநிகழ்ச்சி அழைப்பிதழ் வடிவில் பேனர்களை அச்சிட்டு திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வருவாய்த்துறையினர் வைத்துள்ளனர்.
கண்ணியத்துடன் வாக்களிக்க அழைப்பிதழ்.
அன்புடையீர் நிகழும் மங்களகரமான ஸ்ரீவிகாரி வருடம், சித்திரை 5-ந் தேதி 18.4.2019 வியாழக்கிழமை சதுர்த்தசி திதியும், ஹஸ்தம் நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் வாக்களிக்கும் வைபோகம்.
தங்கள் அருகாமையில் உள்ள வாக்கு சாவடியில் நடைபெறுவதால் 18 வயது நிரம்பிய வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் சுற்றமும், நட்பும் சூழ வருகை தந்து தவறாமல் தங்களின் வாக்கினை பதிவு செய்யுமாறு அழைக்கின்றோம்.
தங்கள் அன்புள்ள உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் (கலால்) திருச்சி மாவட்டம், 144.மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி உள்ளடக்கிய 25.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி.
அவ்வண்ணமே கோரும் உதவி வாக்குப்பதிவு அலுவலர் மற்றும் தாசில்தார் மண்ணச்சநல்லூர். அன்பளிப்பு பெறுவதும், அளிப்பதும் வாக்களிக்கும் விழாவில் பெரும் குற்றமாகும். வைபவம் பற்றிய மேல் விவரங்களுக்கு எண்.1950-ஐ தொடர்பு கொள்ளவும்.
இவ்வாறு அந்த அழைப்பிதழில் இடம்பெற்றுள்ளது.
மண்ணச்சநல்லூர் பகுதியில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த அழைப்பிதழ் வடிவிலான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான பேனரை பொதுமக்கள் பார்த்து ரசித்து செல்கிறார்கள். #LSPolls #ElectionCommission

Next Story