search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்பி முரளி ரம்பா ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.
    X
    கலெக்டர் சந்தீப்நந்தூரி, எஸ்பி முரளி ரம்பா ஆகியோர் மோட்டார்சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி.

    அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி மோட்டார் சைக்கிளில் சென்று பிரசாரம் செய்த கலெக்டர்

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பங்கேற்று பிரசாரம் செய்தார். #LSPolls
    தூத்துக்குடி:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் அனைவரும் முழுமையாக வாக்களிக்கும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

    தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. பேரணியை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்து அவரும் மோட்டார்சைக்கிள் ஓட்டியபடி பங்கேற்றார். அவருடன் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா, மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சப்-கலெக்டர் சிம்ரான் ஜீத் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு ஆகியோரும் பேரணியில் பங்கேற்று இரு சக்கர வாகனங்களை ஓட்டி வந்தனர்.

    இப்பேரணிக்கு வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கல்லூரி வாயிலில், 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவ, மாணவியர் நாடகம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். தொடர்ந்து பாளையங்கோட்டை சாலை வழியாக கலெக்டர் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் மன்னர் மன்னன், டி.எஸ்.பி. பிரகாஷ், போலீசார் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். #LSPolls
    Next Story
    ×