search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.
    X
    வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட காட்சி.

    வேலூர்- திருவண்ணாமலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 5-வது நாளாக மறியல்

    வேலூர்- திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு 5-வது நாளாக இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் தொடக்கப் பள்ளிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. #JactoGeo
    வேலூர்:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் கடந்த 22-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் போராட்டத்தை கைவிட்டு 25-ந் தேதிக்குள் பணிக்கு திரும்பவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் போராட்டம் தொடரும் என்று ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் அறிவித்திருந்தனர்.

    அதன்படி கோர்ட்டு உத்தரவை மீறி கடந்த 25-ந்தேதி வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 1,300 பேரை போலீசார் கைது செய்து சத்துவாச்சாரி பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.

    இதற்கிடையே மாலை 4 மணியளவில் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுதாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சரவணராஜ், மணி, அமர்நாத், பிரின்ஸ் தேவஆசீர்வாதம், சுரேஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். அவர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 5-வது நாளாக இன்று ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் சாலை மறியல் செய்தனர். ஆசிரியர்கள் போராட்டத்தால் தொடக்கப் பள்ளிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மறியலில் ஈடுபட்ட சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் அருகே 5-வது நாளாக இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். #JactoGeo #TeachersProtest
    Next Story
    ×