என் மலர்
செய்திகள்

வானதி சீனிவாசன் கணவர் அமலாக்கத்துறை வக்கீலாக நியமனம்
சென்னை ஐகோர்ட்டுக்கு அமலாக்கத்துறையின் வக்கீலாக தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் வானதி சீனிவாசனின் கணவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. #BJP #VanathiSrinivasan
சென்னை:
தமிழக பா.ஜனதா பொதுச் செயலாளர் வக்கீல் வானதி. இவரது கணவர் சீனிவாசன் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார்.
நாடு முழுவதும் பல மாநிலங்களில் அமலாக்கத்துறைக்கு வக்கீல்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
இதில் சென்னை ஐகோர்ட்டுக்கு அமலாக்கத்துறையின் வக்கீலாக சீனிவாசனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவருடன் ஹேமலதா என்ற வக்கீலும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனிவாசன் ஐகோர்ட்டில் கடந்த 25 வருடங்களாக பணியாற்றி வருகிறார். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தீவிர ஈடுபாடு கொண்டவர்.
அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் மாநில செயலாளராக பணியாற்றினார். பிரபல வக்கீல் பிரசாந்த் பூஷனிடம் சுப்ரீம் கோர்ட்டில் ஜூனியராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது தேசிய இளைஞர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டார். மோடி பிரதமராக வந்ததும் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். மத்திய அரசின் நிர்வாக தீர்ப்பாயத்தின் தலைமை வக்கீலாகவும் பணியாற்றி வருகிறார். #BJP #VanathiSrinivasan

Next Story