search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பராசக்தி கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    பராசக்தி கோவில் உண்டியல்கள் உடைக்கப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.

    திருநாவலூர் அருகே பராசக்தி கோவில் உண்டியல்களை உடைத்து பணம் கொள்ளை

    திருநாவலூர் அருகே பராசக்தி கோவில் உண்டியல்களை உடைத்து கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா கெடிலம் கூட்ரோட்டில் விழுப்புரம் சாலையில் பராசக்தி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தது.

    கோவிலுக்கு வரும் பக்தர்கள் இந்த உண்டியல்களில் காணிக்கைகளை செலுத்துவார்கள். நேற்று இரவு பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டி விட்டு பூசாரி வீட்டுக்கு சென்று விட்டார்.

    நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம மனிதர்கள் கோவில் முன்பு இருந்த கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் அங்கிருந்த 2 உண்டியல்களையும் அவர்கள் கடப்பாரையால் உடைத்தனர். அதில் இருந்த பணத்தை ஒரு பையில் எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கோவிலின் உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து கோவில் நிர்வாகி சூரியமூர்த்தி திருநாவலூர் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர்கள் பரணிதரன், நந்தகோபால் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கொள்ளை போன கோவிலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உண்டியல்களில் ஆயிரக்கணக்கான ரூபாய் இருந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

    உண்டியல்களை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×