search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    போரூரில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.1ž கோடி மோசடி- 4 பேர் கைது
    X

    போரூரில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக ரூ.1ž கோடி மோசடி- 4 பேர் கைது

    போரூரில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    போரூர்:

    நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஜபருல்லா.

    துபாயில் தொழில் அதிபராக இருக்கும் ஜபருல்லா. தனது மகள் ஜகினாவை மருத்துவ மேல் படிப்பான எம்.எஸ். படிக்க வைக்க விரும்பினார். இந்த நிலையில் நெய்வேலியை சேர்ந்த சிலர் மருத்துவ சீட் வாங்கித்தர உதவுவதாக கூறினார்கள்.

    போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரியில் தங்களுக்கு தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மூலம் பணம் கொடுத்து சீட் வாங்கலாம் என்று ஆசைவார்த்தை கூறினார்கள்.

    இதை உண்மை என்று நம்பிய ஜபருல்லா, நெய்வேலியை சேர்ந்த பிரவீன், செல்வராஜ், பாலாஜி, சக்கரவர்த்தி, திருப்பூரை சேர்ந்த ரகு என்கிற மருதாசலம் ஆகியோருக்கு 2 தவணையாக பணம் வழங்கினார். இவர்களிடம் மொத்தம் ரூ.1 கோடியே 72 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

    ஆனால் சொன்னபடி மருத்துவமேல் படிப்புக்காக சீட் வாங்கி கொடுக்கவில்லை. இதுகுறித்து போரூர் போலீசில் ஜபருல்லா புகார் செய்தார்.

    இதையடுத்து, அம்பத்தூர் போலீஸ் துணை கமி‌ஷனர் ஈஸ்வரன் உத்தரவுப்படி போலீஸ் உதவி கமி‌ஷனர் சந்திரசேகர் மேற்பார்வையில் பணம் வாங்கியதாக கூறிய 5 பேரையும் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    போரூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீத்தாராமன், குற்றம் சாட்டப்பட்ட பிரவீன், செல்வராஜ், பாலாஜி, ரகு என்கிற மருதாசலம் ஆகிய 4 பேரை பிடித்து விசாரித்தார். பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். சக்கரவர்த்தி தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில், மத்திய குற்றப்பிரிவுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்காமல் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் சீத்தாராமன் ஆயுதபடை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது. #tamilnews
    Next Story
    ×