என் மலர்

  செய்திகள்

  கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு
  X

  கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்து படகுகளையும் சேதப்படுத்தினர். #Rameswaramfishermen
  ராமேசுவரம்:

  ராமேசுவரம், பாம்பன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு சென்றனர். இவர்களில் ஒரு பகுதியினர் இந்திய கடல் எல்லையையொட்டி உள்ள கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

  அப்போது 15 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் ராமேசுவரம் மீனவர்களை உடனே இங்கிருந்து சென்று விடுங்கள் என்று எச்சரித்தனர். மேலும் படகுகளில் ஏறிய இலங்கை கடற்படை வீரர்கள் மீன்பிடி சாதனங்களையும், வலைகளையும் சேதப்படுத்தினர்.

  மேலும் ரோந்து கப்பல்கள் மூலம் மீனவர்களின் படகுகள் மீது மோத செய்தனர். இதில் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவரின் படகு சேதம் அடைந்தது.

  இதனால் பீதி அடைந்த மீனவர்கள் மீன்பிடிப்பதை விட்டு விட்டு ஏமாற்றத்துடன் கரை திரும்பினர்.

  இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் எங்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

  கடும் டீசல் விலை உயர்ந்திருந்தாலும் அதையும் பொருட்படுத்தாமல் கடன் வாங்கி கடலுக்கு செல்கிறோம். ஆனாலும் அதற்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என வருத்தத்துடன் தெரிவித்தனர். #Rameswaramfishermen

  Next Story
  ×