என் மலர்
செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள குட்கா சிக்கியது - வாலிபர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.30 லட்சம் மதிப்புள்ள குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #GutkhaScam
ஸ்ரீபெரும்புதூர்:
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஓரகடம் கூட்டு சாலையில் ஒரகடம் இன்ஸ்பெக்டர் நடராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வேகமாக வந்த ஒரு மினி லோடு வேனை மடக்கி சோதனை நடத்தினார்கள். அப்போது அதில் தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகள் இருந்தன. அதில் இருந்த 18 மூட்டை குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் எடை 350 கிலோ ஆகும். இதன் மதிப்பு ரூ.30 லட்சம்.
இந்த குட்காவை கடத்தி வந்தது கிருஷ்ணகிரியை சேர்ந்த கார்த்திகேயன் என்பது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். குட்கா மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.
இந்த குட்கா மூட்டைகள் ஓசூரில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. #GutkhaScam
Next Story






