என் மலர்

  செய்திகள்

  கோவையில் 20 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை- அமைச்சர் எஸ்பி வேலுமணி தகவல்
  X

  கோவையில் 20 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை- அமைச்சர் எஸ்பி வேலுமணி தகவல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் 20 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். #ADMK #TNMinister #SPVelumani
  கோவை:

  கோவையில் புதிய பஸ் போக்குவரத்தை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

  தமிழகத்திற்கு புதிய பஸ் சேவையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.

  அதன்படி கோவை கோட்டத்திற்கு 43 பஸ்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. அதில் கோவை மண்டலத்திற்கு 10 பஸ்களும், திருப்பூர் மண்டலத்திற்கு 28 பஸ்களும், ஈரோடு மண்டலத்திற்கு 5 பஸ்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

  கோவை கோட்டத்திற்கு உட்பட்ட புதிய பஸ்கள் தொடக்க விழா கோவை உக்கடத்தில் இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு புதிய பஸ்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கி வைத்தார்.

  அதன்படி கோவை திருச்சிக்கு 2 பஸ்களும், ராமேஸ்வரத்திற்கு 2 பஸ்களும், குமுளிக்கு 2 பஸ்களும், திருவண்ணாமலை, சிவகாசி, நெல்லை, கும்பகோணத்திற்கு தலா ஒரு பஸ்களும் புதிதாக இயக்கப்படுகிறது.

  புதிய பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

  ஜெயலலிதா வழியில் முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்கள்.

  தமிழக மக்களுக்கு என்னென்ன திட்டங்கள் தேவை என்பதை அறிந்து அதனை செயல்படுத்தி வருகிறார்கள். ஜெயலலிதா அறிவித்த திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.

  கோவை மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை வாரி வழங்கி வருகிறார்கள். மேம்பாலம், சாலை விரிவாக்கம், விமான நிலைய விரிவாக்கம், மல்டி லெவல் கார் பார்க்கிங், மெட்ரோ ரெயில் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

  சென்னையில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இங்கிலாந்து டி 40 நிறுவனத்துடன் சேர்ந்து 80 மின்சார பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

  கோவையிலும் 20 மின்சார பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் செலவுகள் குறையும். தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 20 ஆயிரத்து 440 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  புதிய பஸ்கள் தொடக்க விழாவில் கலெக்டர் ஹரிஹரன், போக்குவரத்து மேலாண்மை இயக்குனர் முத்து கிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுணன், எட்டிமடை சண்முகம், ஓ.கே. சின்னராஜ், குணசேகரன், தனியரசு, தமிழக ஹஜ் கமிட்டி தலைவர் சி.டி.சி. அப்துல் ஜப்பார், சி.டி.சி தொழிற்சங்க செயலானர் சி.டி.சி.சின்ராஜ்பகுதி செயலாளர்கள் விமல் சோமு, செல்வகுமார் மற்றும் காட்டூர் செல்வராஜ்,பப்பாயா ராஜேஷ், பால முரளி, காலனி ராஜ்குமார், எம்.பி.பாண்டியன், கமலகண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
  Next Story
  ×