என் மலர்
செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் தமிழ்நாடு சீரழிந்து உள்ளது - ராமதாஸ் குற்றச்சாட்டு

சென்னை:
‘உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குவதில் அரசியல் அமைப்பு சட்டத்தை மதிக்கிறோமா? என்ற தலைப்பில் பா.ம.க. சார்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
அடையாறில் நடந்த இந்த கருத்தரங்கத்துக்கு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி தலைமை தாங்கினார். ஏ.கே. மூர்த்தி வரவேற்றார். இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-
கிராமப்புறங்களில் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் மக்களின் மேம்பாட்டுக்காக ஊராட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. இதற்கு ஏராளமான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பல சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அவற்றை முறையாக பின்பற்றவில்லை. தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் உரிய காலத்தில் நடத்தாததால் அனைத்து பகுதிகளும் சீரழிந்து கிடக்கின்றன. முறையாக தேர்தலை நடத்தி உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அதிகாரம் வழங்க வேண்டும். அதன்மூலம் தான் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த கருத்தரங்கத்திற்கு மாநில துணை பொது செயலாளர்கள் வேளச்சேரி சகாதேவன், ராதா கிருஷ்ணன்,வி.ஜே பாண்டியன், முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காந்திகிராம பல்கலைக்கழக பேராசிரியர் பழனிதுரை, முன்னாள் பஞ்சாயத்து இணை இயக்குனர் தியாகராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.
மாவட்ட செயலாளர்கள் அடையாறு வடிவேல், சிவகுமார், மன்னை சத்யா, வெங்கடேச பெரியார், நிர்வாகிகள் கன்னியப்பன், பி.எஸ்.மூர்த்தி, லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண் டனர். சென்னை மாவட்ட அமைப்பு செயலாளர் ஜெயராமன் நன்றி கூறினார். #Ramadoss #PMK #TNLocalBodyElection