என் மலர்
செய்திகள்

மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் ‘பேனா’வில் மறைத்து தங்கம் கடத்தல்
மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பேனாவில் மறைத்து தங்கம் கடத்தியவரை கைது செய்த அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். #ChennaiAirport #Gold
ஆலந்தூர்:
மலேசியாவில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சென்னையை சேர்ந்த அஸ்மத்கான் என்பவரது சூட்கேசில் ஏராளமான பேனாக்கள் இருந்தன. அதனை பரிசோதனை செய்த போது ‘ரீபி’ளுக்கு பதிலாக தங்க கம்பிகள் இருந்தன.
நூதன முறையில் தங்கத்தை கம்பியாக்கி கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6 லட்சம்.
இது தொடர்பாக அஸ்மத்கானிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில மாதங்களாக சென்னைக்கு விதவிதமாக தங்கம் கடத்தி வரும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
நேற்று தோகாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணி ஒருவரிடம் இருந்து இடுப்பு வலிக்காக கட்டும் பெல்ட்டில் 1½ கிலோ தங்ககட்டி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ChennaiAirport #Gold

Next Story