search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்வெட்டால் ஆட்சியை இழந்த தி.மு.க. மின்தடை குறித்து கூறுவது நகைப்புக்குரியது- காமராஜ் பேட்டி
    X

    மின்வெட்டால் ஆட்சியை இழந்த தி.மு.க. மின்தடை குறித்து கூறுவது நகைப்புக்குரியது- காமராஜ் பேட்டி

    மின்வெட்டிற்காக ஆட்சியையே பறிகொடுத்த தி.மு.க தலைவர்கள் தற்போது இல்லாத மின்வெட்டை பற்றி பேசுவது நகைப்புக்குரியது என்று அமைச்சர் காமராஜ் பேசினார். #ministerkamaraj #dmk #mkstalin
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் லெட்சுமாங்குடியில் உள்ள துணை மின் நிலையத்தில் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள 8 கிலோ மின்மாற்றியினை அமைச்சர் ஆர்.காமராஜ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மின்சார வாரிய கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகரன், அ.தி.மு.க நிர்வாகிகள் பொன்.வாசுகிராம், முகமது அசரப், தமிழ்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறியதாவது:- 

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் சீரான மின் விநியோகம் செய்யும் வகையில் இந்த மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி விவசாயிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் இந்த மின்மாற்றியால் பலன் பெறுவர்.
    தமிழகம் மின் வெட்டு ஏற்படாத வகையில் மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது. 

    தற்போது தொடர் மின்சாரம் உள்ளதால் மின் கம்பிகளை எச்சரிக்கையுடன் பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தாழ்வான நிலையில் உள்ள மின்கம்பிகள் இழுத்து கட்டப்பட்டும், பழுதடைந்த கம்பிகள் மாற்றப்பட்டும் வருகிறது. தமிழகத்தில் மின்வெட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டை முன்வைக்கிறார். 

    தி.மு.க ஆட்சி எப்படி ஊழலால் கலைக்கப்பட்டதோ அதுபோல் மின்வெட்டால் ஆட்சியை இழந்த கட்சியும் தி.மு.க. என்பது அப்போதைய மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியே ஒத்துக் கொண்ட உண்மை. மின்வெட்டிற்காக ஆட்சியையே பறிகொடுத்த தி.மு.க தலைவர்கள் தற்போது இல்லாத மின்வெட்டை பற்றி பேசுவது நகைப்புக்குரியது. 

    இவ்வாறு அவர் கூறினார். #ministerkamaraj #dmk #mkstalin
    Next Story
    ×