என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரும்பாக்கத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை
    X

    பெரும்பாக்கத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

    பெரும்பாக்கத்தில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சோழிங்கநல்லூர்:

    ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்தவர் சுரேஷ் (32). இவருடைய மனைவி பார்கவி என்கிற ரோகிணி (26). பெரும்பாக்கம் பகுதியில் வசித்து வந்தனர்.

    சுரேஷ் சோழிங்கநல்லூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்குதிருமணாகி 3 வருடம் ஆகிறது. அஸ்மிதா என்ற 2 வயது குழந்தை உள்ளது.

    திருமணத்தில் பெண் வீட்டார் சார்பாக 50 பவுன் தங்க நகை, வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், இரு சக்கர வாகனம், ஒரு கார், ரூ. 5 லட்சம் ரொக்கம் ஆகியவை வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.

    இவர்களுக்கு திருமணமாகி ஒரு வருடத்தில் பெண் குழந்தை பிறந்ததால் சுரேஷ் வீட்டாரைச் சேர்ந்தவர்கள் ஆண் குழந்தை பிறக்கவில்லை என ரோகிணியை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    சுரேஷ் தன் மனைவியிடம் 20 லட்சம் மதிப்பிலான புது கார், ரூ.50 லட்சம் ரொக்கம் கேட்டு தினமும் அடித்து சித்ரவதை செய்தார் என்று சொல்லப்படுகிறது.

    கணவன் கொடுமையை தாங்க முடியாமல் ரோகிணி மன உளைச்சலில் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாதபோது மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பள்ளிக்கரணை போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்தனர்.

    போலீசார் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ரோகிணியின் கணவர் சுரேஷ் தலைமறைவாகி விட்டார். பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேசை தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×