என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் பலி
    X

    ஊத்துக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் பலி

    ஊத்துக்கோட்டை அருகே நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் சமையல்காரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள மேட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 50) சமையல்காரர்.

    நேற்று இரவு உடன் வேலை பார்க்கும் அதே பகுதியை சேர்ந்த தரணி, சதீஷ் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் சமையல் செய்ய சென்றார்.

    தச்சூர்மேடு பகுதியில் சென்று கொண்டு இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் கீழே சரிந்தது.

    இதில் மணி, தரணி, சதீஷ் ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணி பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து பென்னாலூர்பேட்டை இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×