search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்- புகழேந்தி பேட்டி
    X

    சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார்- புகழேந்தி பேட்டி

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளார் என்று புகழேந்தி தெரிவித்துள்ளார். #pugazhenthi #sasikala

    தருமபுரி:

    சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுக்கு தண்டனை காலம் முடிய இன்னும் 2 ஆண்டுகள் பாக்கி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு சர்க்கரையின் அளவு அதிகரித்ததாகவும், அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் வதந்தி பரவியது. இது குறித்து கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழக செயலாளரரும், செய்தி தொடர்பாளருமான புகழேந்தியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் சசிகலா சிறையில் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார். கடந்த 2, 3 மாதங்களாகவே அவரது உடல்நிலை குறித்து சிலர் வதந்திகளை பரப்பி வருகின்றனர். அரசியல் அனாதைகள் தான் இது போன்ற வதந்திகளை பரப்பி வருவது எங்களுக்கு தெரியும்.


    கடந்த மாதம் சசிகலா பிறந்த நாளின் போது எங்கள் கட்சி துணை பொதுச் செயலாளர் தினகரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை சந்தித்து பேசினோம். அப்போது அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உற்சாகமாக எங்களிடம் பேசினார். இனிமேலாவது அவரது உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் யாரும் இந்த வதந்தியை நம்பவேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #pugazhenthi #sasikala

    Next Story
    ×