என் மலர்

  செய்திகள்

  விஜயகாந்த் பிறந்த நாள்- கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
  X

  விஜயகாந்த் பிறந்த நாள்- கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தே.மு.தி.க. பொது செயலாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழாவையொட்டி கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. #HBDCaptainVijayakanth

  கோவை, ஆக.25-

  தே.மு.தி.க. பொது செய லாளர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா இன்று கோவை மாநகர் கிழக்கு மாவட்டம் சார்பில் சிறப்பாக கொண்டா டப்பட்டது.

  இதையொட்டி புலியகுளம் முந்தி விநாயகர்கோவிலில் சிறப்பு பூஜை, புனித அந்தோ ணியார் ஆலயத்தில் பிரார்த் தனை, தொழிற்சங்கம் சார்பில் சி.டி.சி. டெப்போ அருகில் கொடி யேற்று விழா, அன்ன தானம் வழங்குதல், ஜங்கில்பீர் தர்காவில் தொழுகை நடந்தது.

  தொடர்ந்து கோவை அரசு ஆஸ்பத்திரியில் இன்று பிறந்த 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப் பட்டது. மேலும் உள்நோயா ளிகளுக்கு பழம், பிஸ்கெட் வழங்கினர். பின்னர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் கேக் வெட்டி கொண்டாடி னர். இதைத்தொடர்ந்து 40-வது வார்டில் சிறப்பு பூஜை, அன்னதானம் நடந் தது. நிகழ்ச்சிகளுக்கு மாநகர் மாவட்ட செயலாளர் காட்டன் ஆர்.செந்தில் தலைமை தாங்கினார். மாநில கலை இலக்கிய அணி துணை செயலாளர் சிங்கை சந்துரு, அவை தலைவர் கேசவன், பொருளாளர் லிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்த ராஜ், பொன்ராஜ், ஆனந்த குமார், வனிதா துரை,

  செயற்குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியம், பழனி, பகுதி செயலாளர்கள் சர்தார் என்ற ஜாகீர் உசேன், தண்டபாணி, ஆனந்தக்குமார், முத்து குமார், பன்னீர்செல்வம், தீனதயாளன், பொதுக்குழு உறுப்பினர் பாக்ஸ் மூர்த்தி, வர்த்தக அணி கார்த்திசன், மாணவரணி வினோத் உள்பட பலர் கலந்து கொண் டனர்.

  இன்று மாலை 6 மணிக்கு காந்தி பார்க் பால தண்டபாணி கோவிலில் தங்கத்தேர் இழுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

  Next Story
  ×