என் மலர்

  செய்திகள்

  பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்.
  X
  பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருட்கள்.

  ஆயிரம்விளக்கில் ரூ.1 லட்சம் குட்கா பறிமுதல்- வீட்டில் பதுக்கியவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
  சென்னை:

  சென்னை ஆயிரம் விளக்கு மாடல்பள்ளி ரோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசில் சிக்கினார்.

  அவரிடம் விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினார். இதனை தொடர்ந்து அவர் மீதான சந்தேகம் மேலும் வலுவானது. போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது அவர் குட்கா வியாபாரி என்பது தெரிய வந்தது.

  போலீஸ் விசாரணையில் பிடிபட்ட வாலிபரின் பெயர் அமினுர் ரகுமான் (42) என்பதும் ஆம்பூரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

  தனது வீட்டில் குட்கா போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

  இதனையடுத்து ஆயிரம் விளக்கு ஆசிஸ் முல்க் தெருவில் உள்ள அமினுர் ரகுமான் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.

  கைதான அமினுர்ரகுமான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  Next Story
  ×