என் மலர்
செய்திகள்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 1 கிலோ தங்ககட்டி கடத்தல்
துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பேரீச்சம்பழ டப்பாவில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று காலை பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சென்னையை சேர்ந்த சர்புதீன் என்பவரது நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்தனர்.
பேரீச்சம் பழங்கள் இருந்த டப்பாக்களில் 1 கிலோ தங்க கட்டிகள் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் அதே விமானத்தில் வந்த ஆந்திராவை சேர்ந்த சகுந்தலா என்பவரை தனி அறையில் வைத்து சோதனையிட்டனர். அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து 300 கிராம் நகைகளை எடுத்து வந்திருந்தது தெரிந்தது.
மொத்தம் 1 கிலோ 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.40½ லட்சம் ஆகும். தங்கம் கடத்தி வந்த சர்புதீன், சகுந்தலாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். #ChennaiAirport

Next Story