என் மலர்

  செய்திகள்

  பெரம்பலூர் அருகே கள்ளக்காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை
  X

  பெரம்பலூர் அருகே கள்ளக்காதலியை கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரம்பலூர் அருகே கள்ளக்காதலியை கத்தியால் குத்தி விட்டு வாலிபர் கழுத்தை அறுத்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள துங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது 35), வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

  இந்தநிலையில் சங்கருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த உறவினரான தனபாலின் மனைவி செந்தாமரைக்கும் கள்ளக்காதல் இருந்து வந்தது. சம்பவத்தன்று கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் வசித்து வரும் செந்தாமரையின் மகள் லலிதா (30) பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார்.

  இதனை அறியாத சங்கர் செந்தாமரையை சந்திக்க அவரது வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டில் இருந்த லலிதாவிடம் நைசாக பேச்சு கொடுத்த அவர், சில்மி‌ஷத்திலும் ஈடுபட தொடங்கினார். அதிர்ச்சியடைந்த லலிதா சத்தம் போடவே, செந்தாமரை வந்து சங்கரை தடுத்து நிறுத்தினார். இதில் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சங்கர், கத்தியால் செந்தாமரை மற்றும் லலிதாவை சரமாரி குத்தினார். கத்திக்குத்தில் காயமடைந்த இருவரும் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தனர்.

  இதைத்தொடர்ந்து சங்கர், தனக்குதானே கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டார். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து சென்றனர். 3 பேரும் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனே மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். சங்கரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் இறந்தார்.

  இந்த சம்பவம் குறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Tamilnews
  Next Story
  ×