என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருமுல்லைவாயலில் கள்ளக்காதல் தகராறில் வாலிபர் வெட்டிக் கொலை
திருநின்றவூர்:
திருமுல்லைவாயல் நியூ அண்ணாநகரை சேர்ந்தவர் ராம்பாபு. இவரது மகன் சிரஞ்சீவி (வயது 28), பெயிண்டர். நேற்று மாலை வேலைக்கு சென்ற அவர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதி நேரு நகரில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது தலை, கழுத்தில் பலத்த வெட்டுக் காயங்கள் இருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருமுல்லைவாயல் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சிரஞ்சீவியின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் கள்ளக்காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
சிரஞ்சீவிக்கும் அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தில் கணவருடன் வசிக்கும் ஜெயலட்சுமிக்கும் கள்ளக்காதல் இருந்தது. திருமணத்துக்கு முன்பே ஜெயலட்சுமியும் சிரஞ்சீவியும் காதலித்து வந்தனர்.
இதையடுத்து திருமணம் ஆன பின்பும் ஜெயலட்சுமி அவருடன் காதலை தொடர்ந்தார். இதனை அறிந்த ஜெயலட்சுமியின் கணவர் ஜானகிராமன் கண்டித்தார்.
இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஜெயலட்சுமி கணவருடன் வாழ முடியாது என்று கூறி ஆவடி மகளிர் காவல்நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
மேலும் அம்பத்தூரில் உள்ள மகளிர் விடுதியில் தனியாக தங்கி இருந்தார். அவரை போலீசார் சமாதானப்படுத்தி கணவருடன் அனுப்பி வைத்திருந்தனர். இந்த நிலையில் சிரஞ்சீவி கொலை செய்யப்பட்டுள்ளார். எனவே கள்ளக்காதல் விவகாரத்தில் இந்த கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இது தொடர்பாக ஜானகிராமனை போலீசார் பிடித்துள்ளனர். அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக்கு பின்னரே சிரஞ்சீவி கொலைக்கான காரணம் என்ன? கொலையாளிகள் யார்? கூலிப்படையை ஏவி தீர்த்துக் கட்டப்பட்டாரா? என்ற விவரம் தெரியவரும்.
கள்ளக்காதல் தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருமுல்லைவாயல் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.