என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவையில் தடைசெய்யப்பட்ட 2,400 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்
    X

    கோவையில் தடைசெய்யப்பட்ட 2,400 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல்

    கோவை செல்வபுரம் ராஜேந்திரா நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    கோவை:

    கோவை செல்வபுரம் ராஜேந்திரா நகரில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக செல்வபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். குறிப்பிட்ட இடத்தை சோதனை செய்தபோது 2 ஆயிரத்து 400 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் இருந்தன.

    இதனை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த செல்வபுரத்தை சேர்ந்த கிருஷ்ணராஜ் (வயது 49), திண்டுக்கல் வேடச்சந்தூரை சேர்ந்த சரவணன் (35). ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த சின்னதம்பி (46), சிவக்குமார் (36) ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2,400 கிலோ புகையிலைப்பொருள் மற்றும் அதை கடத்த பயன்படுத்திய வேனையும் பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×