என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்

திண்டுக்கல், பழனியில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து போராட்டம்

திண்டுக்கல்:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு பகுதிகளில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
திண்டுக்கல் பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும், போராட்டக்காரர்களுக்கு ஆதரவாகவும் கோஷமிட்டனர்.
இதனையடுத்து அங்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 54 பேரை கைது செய்தனர்.
பழனியில் பைபாஸ் ரவுண்டானா அருகே டி.ஒய்.எப். ஐ. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் கோபிநாத் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கி சூடு நடத்திய போலீசார் மற்றும் அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கு மேலும் ஸ்டெர்லைட் ஆலையை அங்கு தொடர அனுமதிக்க கூடாது என்று கோஷங்கள் எழுப்பினர். #SterliteProtest #BanSterlite