search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் மனைவி-மகனுடன் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை
    X

    ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் மனைவி-மகனுடன் விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஆத்தூர் அருகே கடன் தொல்லையால் மனைவி, மகனுடன் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தம்மம்பட்டி புலிகரடு பகுதியை சேர்ந்தவர் அர்ச்சுணன் (வயது 50). விவசாயியான இவர் விவசாய தேவைக்காக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரிடம் ரூ. 3 லட்சம் கடன் வாங்கினார்.

    ஆனால் விவசாயத்தில் எதிர்பார்த்த வருமானம் இல்லாததால் அந்த பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் கடந்த சில மாதமாக அர்ச்சுணன் கடும் அவதிப்பட்டு வந்தார்.

    இதற்கிடையே கடன் கொடுத்தவர் அடிக்கடி பணத்தை திரும்ப கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக மனம் உடைந்த நிலையில் அர்ச்சுணன் இருந்தார்.

    மேலும் பணத்தை கொடுக்க முடியாமல் தவித்து வந்த அர்ச்சுணன் குடும்பத்தினருடன் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி நேற்றிரவு தனது 2-வது மனைவி வெண்ணிலா (35), மகன்கள் மோகன் (12), பிரகாஷ் (8) ஆகியோருக்கு தண்ணீரில் கலந்து வி‌ஷத்தை கொடுத்த அர்ச்சுணன் தானும் அதனை குடித்தார். பின்னர் குளிர்பானமும் குடித்ததால் அனைவரும் மயங்கி விழுந்தனர்.

    இன்று காலை மூத்த மகன் மோகன் கண் விழித்து பார்த்த போது பெற்றோர் மற்றும் தம்பி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் கதறி அழுதார்.

    அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அப்போது அர்ச்சுணன், அவரது மனைவி வெண்ணிலா, மகன் பிரகாஷ் உள்பட 3 பேர் வீட்டிற்குள் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் மோகனிடம் விசாரித்தனர்.

    கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த தனது அப்பா குடும்பத்துடன் தற்கொலை செய்ய முடிவு செய்து எங்களுக்கு வி‌ஷத்தை கொடுத்து விட்டு அவரும் குடித்தார். அதில் அவர்கள் 3 பேரும் இறந்து விட்டனர் என்று கண்ணீர் விட்டு கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

    இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனே மோகனை தம்மம்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வி‌ஷம் குடித்து இறந்த 3 பேரின் உடலையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அர்ச்சுணனுக்கு கடன் கொடுத்த நபர்கள் யார்? என்பது குறித்தும், அவர் எவ்வளவு வட்டி வாங்கினர் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடனை திருப்பி செலுத்த முடியாமல் ஒரே குடும் பத்தை சேர்ந்த 3 பேர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×