என் மலர்

  செய்திகள்

  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - என்.ஆர்.தனபாலன்
  X

  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் - என்.ஆர்.தனபாலன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #BanSterlite #TalkAboutSterlite

  சென்னை:

  பெருந்தலைவர் மக்கள் கட்சித்தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவுப் படுத்தும் பணியில் அந்நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள தீமைகளை எடுத்து வைத்து போராடி வருகிறார்கள். இந்த ஆலையால் பொது மக்களுக்கு பல வழியில் தீங்கு இழைக்கப்படுகிறது.

  தாமிரம் உருக்கு ஆலையால் அப்பகுதியில் சுற்றுச்சுழல் மாசுபடுகிறது. நிலத்தடி நீர் மாசுபட்டு அதன்மூலம் அப்பகுதி மக்களுக்கு பல வழிகளில் நோய்கள் வருகிறது. எனவே ஸ்டெர்லைட் ஆலையை தமிழகத்தைவிட்டு வெளியேற்ற தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். #BanSterlite #TalkAboutSterlite #tamilnews

  Next Story
  ×