search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மே மாதம் வெயில் கடுமையாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    மே மாதம் வெயில் கடுமையாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்

    மே மாதம் கோடை வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    கோடைகாலம் தொடங்கும் முன்பே இந்த ஆண்டு வெயில் கடுமையாக கொளுத்த தொடங்கியுள்ளது. மார்ச் 21-ந்தேதி முதல் சூரியன் பூமத்திய ரேகைக்கு மேல் உச்சியில் செங்குத்தாக பிரகாசிக்க தொடங்கியது. அதன்பிறகு சூரியன் வடக்கு நோக்கி பயணிக்க தொடங்கியது. இதன்காரணமாக வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருகிறது.

    இந்த ஆண்டு மே மாதம் கோடை வெயில் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியதாவது:-

    இந்திய வானிலை ஆய்வு மையம் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முந்தைய மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நிலவும் வெப்பநிலை குறித்து நீண்டகால அறிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் 2 வாரத்துக்கு முன்பு வெளியிட்டது.

    அதன்படி தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கால கட்டத்தில் அதிகபட்ச வெப்பநிலையானது முந்தைய ஆண்டுகளில் இதே கால கட்டத்தில் இருந்த வழக்கமான வெப்ப நிலையைவிட 0.5 டிகிரி அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.

    தமிழகத்தில் வடக்கும் வடமேற்கு மாவட்டங்களில் வெப்பநிலை அதிகமாக இருக்கும். குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், தர்மபுரி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் வெப்பநிலை சற்று அதிகமாக காணப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilnews

    Next Story
    ×