என் மலர்
செய்திகள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம் - அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன்
பாராளுமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை போராடுவோம் என்று அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் கூறினார்.
ஆலந்தூர்:
சென்னையை அடுத்த ஆலந்தூர் பகுதி அ.தி.மு.க. சார்பில், நங்கநல்லூரில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஏழைகளுக்கு பிரியாணி வழங்கும் விழா நடந்தது. வட்ட செயலாளர் ராஜா தலைமையில் நடந்த இந்த விழாவில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மைத்ரேயன் கலந்து கொண்டு பிரியாணிகளை வழங்கினார்.
பின்னர் மைத்ரேயன் எம்.பி. கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். தமிழகத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் அ.தி.மு.க.வின் 50 எம்.பி.க்களும் தினமும் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் போராட்டம் நடத்தி வருகிறோம். 2 வாரங்களாக பாராளுமன்ற அவை செயல்பட முடியாத ஒரு சூழ்நிலையை உருவாக்கி வருகிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை அ.தி.மு.க. எம்.பி.க்களின் போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கட்ராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #tamilnews

Next Story