என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் உடல் இன்று தகனம்
    X

    சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் உடல் இன்று தகனம்

    சென்னை நுங்கம்பாக்கத்தில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியான ரத்தினவேல் பாண்டியன் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது.
    சென்னை:

    சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் நீதிபதி எஸ்.ரத்தினவேல் பாண்டியன் (89). நேற்று முன்தினம் காலமானார். அண்ணாநகர் 6-வது அவென்யூவில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

    ரத்தினவேல் பாண்டியனின் 2-வது மகன் ரவிச்சந்திரன் அமெரிக்காவில் இருந்து நேற்று இரவு வந்தார். அதனால் இன்று இறுதி சடங்கு நிகழ்ச்சி நடந்தது.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் பொன்னையன், டாக்டர் அன்புமணி ராமதாஸ், நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ. மற்றும் ஐகோர்ட்டு வக்கீல்கள் இறுதியாக அஞ்சலி செலுத்தினர்.

    பின்னர் உடல் வேனில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் வைகோ உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். நுங்கம்பாக்கம் இடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது. #Tamilnews
    Next Story
    ×