என் மலர்

    செய்திகள்

    சென்னையில் இருந்து குஜராத் புறப்பட்ட பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார் தமிழக முதல்வர்
    X

    சென்னையில் இருந்து குஜராத் புறப்பட்ட பிரதமரிடம் கோரிக்கை மனு அளித்தார் தமிழக முதல்வர்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    இரு நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து சென்னையில் இருந்து இன்று மாலை குஜராத்துக்கு புறப்பட்ட பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் பழனிச்சாமி கோரிக்கை மனுவை அளித்தார். #PMModi #ModiinChennai

    சென்னை:

    இரு நாட்கள் பயணத்தை முடித்துகொண்டு சென்னையில் இருந்து குஜராத் மாநிலத்துக்கு புறப்பட்ட பிரதமர் மோடியிடம், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை மனுவை அளித்தார்.

    பிரதமர் மோடி நேற்று சென்னையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் இன்று புதுச்சேரி சென்ற பிரதமர் ஆரோவில் வெள்ளிவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பின்னர் அங்கு நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் உறையாற்றிய பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.



    சென்னையிலிருந்து குஜராத் புறப்பட்ட பிரதமர் மோடியை தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய இணை மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். அப்போது தமிழகத்தின் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர் மோடியிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அளித்தார்.

    சென்னையில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி, குஜராத் மாநிலத்தின் சூரத் நகருக்கு சென்றடைந்தார். #PMModi #ModiinChennai #tamilnews
    Next Story
    ×