என் மலர்
செய்திகள்

பொன்னேரி பஸ் நிலையத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து பொது மக்கள் போராட்டம்
பொன்னேரி:
பஸ் கட்டண உயர்வுக்கு பொது மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகிறார்கள்.
பஸ் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் பொன்னேரி புதிய பஸ் நிலையத்தில் இன்று காலை சுமார் 50-க்கும் மேற்பட்ட பொது மக்கள் திடீரென திரண்டு ஆர்ப்பாட்டத்தில் திரண்டனர். அவர்கள் பஸ் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் பதாகைகளை ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினர்.
பொது மக்கள் இந்த போராட்டத்துக்கு பஸ் நிலையத்துக்கு வந்த பயணிகளும் ஆதரவு தெரிவித்தனர். அவர்களும் போராட்டத்தில் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.
இதனால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி போலீசார் விரைந்து வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.