என் மலர்
செய்திகள்

கரூரில் மீண்டும் சுவர் விளம்பர பிரச்சினை: அ.தி.மு.க - தினகரன் அணியினர் மீண்டும் திரண்டதால் பரபரப்பு
கரூரில் மீண்டும் சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக அ.தி.மு.க. - டி.டி.வி. தினகரன் தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர்:
டி.டி.வி.தினகரன் அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் கரூரில் உள்ள திருவள்ளுவர் மைதானத்தில் நடத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திட்டமிட்டுள்ளார்.
இதற்கு மதுரை ஐகோர்ட்டு அனுமதி அளித்தும் கரூர் நகராட்சி ஆணையர் தரப்பில் இருந்து இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. இது தொடர்பான பிரச்சினை கோர்ட்டில் நடந்தது வருகிறது. செந்தில்பாலாஜி நகராட்சி ஆணையர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு மீதான விசாரணை வருகிற 31-ந்தேதி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க சுவர் விளம்பரம் எழுதுவதில் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. தரப்பினர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. கடந்த 24-ந்தேதி வெங்கமேடு ரெயில்வே மேம்பாலத்தில் டி.டி.வி. தினகரன் தரப்பினர் சுவர் விளம்பரம் எழுத போலீசார் எதிர்ப்பு தெரிவித்து அனுமதி மறுத்தனர்.
பின்னர் அதே இடத்தில் மீண்டும் நேற்று முன்தினம் சுவர் விளம்பரம் எழுத முயற்சித்தபோது மீண்டும் பிரச்சினை வெடித்தது. சுவர் விளம்பரம் எழுதிய வாலிபரை போலீசார் தாக்கினர். உடனே முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அப்பகுதியில் திரண்டனர். பின்னர் போலீசாருக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைதொடர்ந்து செந்தில் பாலாஜி உள்ளிட்ட 70 பேர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கரூர் திருமாநிலையூர் ரவுண்டானா அருகே தடுப்பு சுவரில் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் சுவர் விளம்பரம் எழுதினர். அந்த சுவரில் விளம்பரம் எழுத அ.தி.மு.க. ஏற்கனவே முன்கூட்டியே இடம்பிடித்து குறியீடு போட்டிருப்பதாகவும், ஆகவே அதில் எழுத கூடாது என்றும் அப்பகுதி அ.தி.மு.க.வினர் டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்களிடம் கூறினர். ஆனால் சுவர் விளம்பரம் எழுதப்படும் என டி.டி.வி.தினகரன் தரப்பினர் ஆணித்தரமாக தெரிவித்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்த கீதா எம்.எல்.ஏ., அ.தி.மு.க. நகர செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் நிர்வாகிகள் அப்பகுதியில் திரண்டனர். இதேபோல டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் கோல்டு ஸ்பாட் ராஜா, தியாகு உள்பட பலர் திரண்டனர். இரு தரப்பினரும் எதிரெதிர் திசையில் நின்று கொண்டிருந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
அதைதொடர்ந்து கரூர் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா, பசுபதிபாளையம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு, சுவர் விளம்பரம் எழுதுவதில் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் கலெக்டர் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
அதன்பின்னரும் இரு தரப்பினரும் கலைந்து செல்ல மறுத்து அங்கேயே திரண்டு நின்றனர். சிறிது நேரத்திற்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சுவர் விளம்பர பிரச்சினை அ.தி.மு.க - டி.டி.வி.தினகரன் தரப்பினர் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள அலுவலகத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் டி.டி.வி.தினகரனுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது, சுவர் விளம்பரம் எழுத அனுமதி மறுக்கும் போலீசாருக்கு கடும் கண்டனம் தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story