என் மலர்

  செய்திகள்

  கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தே.மு.தி.க. சார்பில் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்
  X

  கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தே.மு.தி.க. சார்பில் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்: விஜயகாந்த்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை உடனே வழங்க கோரி கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தே.மு.தி.க. சார்பில் வரும் 4-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
  சென்னை:

  தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

  தமிழக கரும்பு விவசாயிகளின் நிலுவைத் தொகையை சுமார் 4 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் பல முறை தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தும், இதுவரையிலும் விவசாயிகளுக்கு வழங்கப்படாததை கண்டித்து வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் முன்பு தே.மு.தி.க. சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெறும்.

  விவசாயிகளுடைய வாழ்வாதாரம் மேலோங்கிட, இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கழக நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாய பெருமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

  இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
  Next Story
  ×