என் மலர்
செய்திகள்

கைதான சங்கரராவ்
கல்பாக்கம் பள்ளியில் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை: இந்தி ஆசிரியர் கைது
கல்பாக்கம் பள்ளியில் படித்து வரும் 6-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்தி ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அணுமின் நிலைய குடியிருப்பில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு அணுமின் நிலைய ஊழியர் ஒருவரின் 11 வயது மகள் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
மாலை பள்ளி முடிந்ததும் இந்தி ஆசிரியர் சங்கரராவ் 6-ம் வகுப்பு மாணவிகளுக்கு சிறப்பு வகுப்பு நடத்தினார். பின்னர் குறிப்பிட்ட மாணவியை மட்டும் வீட்டு பாடங்களை முடித்து செல்லுமாறு கூறிவிட்டு மற்ற மாணவிகளை அனுப்பி விட்டார்.
இந்த நிலையில் தனியாக இருந்த மாணவிக்கு ஆசிரியர் சங்கரராவ் பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக வீட்டுக்கு வந்து பெற்றோரிடம் தெரிவித்தார்.
இது குறித்து கல்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியர் சங்கரராவை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
Next Story






