என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிவகங்கை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது
    X

    சிவகங்கை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் 2 பேர் கைது

    சிவகங்கை மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி வந்த போலி டாக்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே உள்ள சவரக்கோட்டை பகுதியில் காரைக்குடி பர்மா காலனியைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் கிளினீக் நடத்தி வந்தார். இவர் மருத்துவம் படிக்காமல் கிளினீக் நடத்தியதாக புகார் வந்தது.

    இதையடுத்து சவரக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆல்வின்ஜேம்ஸ் அங்கு சென்று ஆய்வு நடத்திய போது நாகராஜன் பிளஸ்-2 படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது.

    இதுகுறித்து ஆல்வின் ஜேம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் கல்லல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ் வழக்குப்பதிவு செய்து நாகராஜனை கைது செய்தார்.

    இதே போல் தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்பத்து கிராமத்தில் அதே பகுதியை சேர்ந்த பாண்டி (49) என்பவர் மருத்துவம் படிக்காமல் கிளீனிக் நடத்தி வந்தார்.

    இதுகுறித்து தேவகோட்டை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவ அதிகாரி ராமு கொடுத்த புகாரின் பேரில் திருவேகம்பத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியாமணி வழக்குப்பதிவு செய்து பாண்டியை கைது செய்தார்.

    Next Story
    ×