என் மலர்

  செய்திகள்

  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணைய தலைவர் ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றார்
  X

  ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆணைய தலைவர் ஆறுமுகச்சாமி பொறுப்பேற்றார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கமிஷனின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி இன்று பொறுப்பேற்றார்.
  சென்னை:

  மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன. இதனையடுத்து, மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்து விசாரிப்பதற்காக விசாரணை ஆணையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் இந்த விசாரணை நடைபெறும் என தெரிவித்த தமிழக அரசு, மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யும் எனவும் தெரிவித்திருந்தது.

  இந்நிலையில், சென்னை எழிலகத்தில் அமைக்கப்பட்ட விசாரணை ஆணைய அலுவலகத்தில் ஆறுமுகசாமி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். நாளை முதல் அவர் விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
  Next Story
  ×