என் மலர்

  செய்திகள்

  நிலக்கோட்டை அருகே ஆசை வார்த்தை கூறி 2 சிறுமிகள் கற்பழிப்பு
  X

  நிலக்கோட்டை அருகே ஆசை வார்த்தை கூறி 2 சிறுமிகள் கற்பழிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நிலக்கோட்டை அருகே ஆசைவார்த்தை கூறி சிறுமிகளை கற்பழித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

  நிலக்கோட்டை:

  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே சில்லாபட்டியை சேர்ந்தவர் பெருமாள் மகள் ராணி(வயது17)(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரும் அழகம்பட்டியை சேர்ந்த ஆனந்தபாபு(24) என்பவரும் காதலித்து வந்தனர். சம்பவத்தன்று ராணியிடம் ஆசை வார்த்தை கூறி ஆனந்தபாபு கற்பழித்துள்ளார்.

  இதுகுறித்து தனது தாயிடம் அழுதுகொண்டே ராணி கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் சுப்புலட்சுமி நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் லட்சுமிபிரபா வழக்குபதிவு செய்து ஆனந்த்பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தார்.

  விளாம்பட்டி அருகே உள்ள ஆவாரம்பட்டியை சேர்ந்தவர் மாயாண்டி மகள் தேவி(16) (பெயர்மாற்றப் பட்டுள்ளது). அதேபகுதியில் உள்ள டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற தேவி திடீரென மாயமானார். இதுகுறித்து விளாம்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் சுகுமார் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

  இதனிடையே அதே பகுதியை சேர்ந்த சின்னராஜா(24) என்பவர் தேவியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கற்பழித்துள்ளார்.

  இது குறித்த புகாரின் பேரில் விளாம்பட்டி போலீசார் சின்னராஜாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Next Story
  ×