என் மலர்

  செய்திகள்

  புதுவை விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்ற போது எடுத்த படம்.
  X
  புதுவை விவசாயிகள் டெல்லி புறப்பட்டு சென்ற போது எடுத்த படம்.

  கவர்னருக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த புதுவை விவசாயிகள் பயணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  புதுச்சேரி:

  புதுவையில் காங்கிரஸ் அரசு பதவியேற்றவுடன் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 20 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

  கவர்னர் கிரண்பேடி இதுவரை அதற்கான ஒப்புதல் வழங்கவில்லை.

  இது தொடர்பாக விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

  இந்த நிலையில் புதுவை அரசு எடுத்த முடிவின் அடிப்படையில் விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன் 20 கோடி ரூபாயை மத்திய அரசு தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்க கோரியும், விவசாயிகள் மற்றும் புதுவை மாநில வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் கவர்னர் கிரண்பேடியை உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் வருகிற 28-ந் தேதி டெல்லி பாராளுமன்றம் அருகே உள்ள ஜந்தர்மந்தரில் உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்துவதற்காக 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் புதுவையில் இருந்து டெல்லி செல்லும் விரைவு ரெயிலில் இன்று டெல்லி புறப்பட்டு சென்றனர்.

  கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், முதற்கட்டமாக விவசாயிகள் கிரண்பேடிக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  Next Story
  ×