என் மலர்
செய்திகள்

குத்தாலம் அருகே திருமண விருந்து சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி, மயக்கம்
குத்தாலம் அருகே திருமண விருந்தில் சாப்பிட்ட 25 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்களுக்கு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே பொரும்பூர் ஊராட்சி வேலங்குடியில் நேற்று முன்தினம் பாஸ்கர் என்பவரது வீட்டில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்துகொண்டவர்களுக்கு விருந்து பறிமாறப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்ற இவருக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டது.
இதையெடுத்து சிறுவர், சிறுமியர் உள்பட 25 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. அவர்களை உடனிருந்த உறவினர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது.
ஊராட்சியில் விநியோகிக்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரே வாந்தி மயக்கத்திற்கு காரணம் என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story